மேட்டூர்: 215வது முறையாக மேட்டூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன. 62 வயதாக அவர் பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது சட்டசபை தேர்தலையொட்டி 215வது முறையாக மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
8ம் வகுப்பு வரை படித்த அவர் கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 1988ம் ஆண்டு முதன்முதலில் மேட்டூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார். முக்கிய அரசியல் தலைவர்கள், முதல்வர், பிரதமர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளை குறி வைத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.