திருச்சி:
ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மருத்துவ கல்லூரி இடம் தொடர்பான பண மோசடி, மதன் காணாமல் போனது பற்றிய வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஐஜேகே கட்சியின் தொண்டர்கள் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மேலும் சேலம் அருகே அம்மம்பாளையம், ஆத்தூர் புறவழிச்சாலை பகுதியில் 2 அரசு பேருந்து களின் கண்ணாடிகள் பச்சுமுத்து ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டன. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel