பச்சமுத்துவை வுட்டுடுங்க.. நாங்க சிறையில இருக்கோம்!: வந்துருச்சிய்யா வீரலட்சுமி!

Must read

ரவுண்ட்ஸ்பாய் அளிக்கும் செய்தி:
images
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுளள எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்துவை விடுதலை செய்ய வேண்டும் என்று, “தமிழர் முன்னேற்றப்படை” கட்சியின் தலைவி வீரலட்சுமி, பேஸ்புக்கில் வலியுறுத்தி உள்ளார்.

பச்சமுத்து
பச்சமுத்து

இது குறித்து வீரலட்சுமி, தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு:
“இப்போது தமிழர் மண்ணில் தமிழர் ஆளுமை செலுத்துவதை பாதுகாப்போம்.   வந்தேரி கூட்டத்தின் சதி திட்டத்தை முறியடிப்போம்.
தமிழினம் பாதுகாக்க அணி திரளுங்கள் உறவுகளே.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும்  ஆளுமை செலுத்தும் ஐயா பச்சைமுத்து அவர்களின் உடல்நிலையை கருதி மூன்று தினத்திற்குள் விடுதலை செய்யுங்கள்.
விடுதலை செய்ய விரும்பும் இல்லை என்றால் அவருக்கு பதிலாக நான்காவது நாள் நாங்கள் புழல் சிறையை நோக்கி வருகின்றோம். எங்களை புழல் சிறையில் அடைத்து கொள்ளுங்கள்.
வீரலட்சுமி
வீரலட்சுமி

இப்படிக்கு,
வீரலட்சுமி,  நிறுவனத்தலைவர்,  தமிழர் முன்னேற்ற படை” என்று தனது பேஸ்புக் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்திலில் வைகோவின் மதிமுகவுக்கும், விஜயகாந்தின் தேமுதிகவுக்கும் வீரலட்சுமி தனது ஆதரவை வழங்கிய போதுதுதுதுதுது..
கடந்த சட்டமன்ற தேர்திலில் வைகோவின் மதிமுகவுக்கும், விஜயகாந்தின் தேமுதிகவுக்கும் வீரலட்சுமி தனது ஆதரவை வழங்கிய போதுதுதுதுதுது..

ஏற்கெனவே “பீப்” பாடல் பாடிய நடிகர் சிம்வுக்கு தீவிர ஆதரவு அளித்தவர் இந்த வீரலட்சுமி என்பதும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவுடன் கூட்டணி வைத்து (!)  ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பதும் குகுகுகுகுறிப்பிடத்தக்கது.
அப்புறம் தமிழ்ப்போராளி வீரலட்சுமி்க்கு, இந்த ரவுண்ட்ஸ்பாயோட  ஒரு வேண்டுகோள். தமிழை தப்பில்லாம எழுங்க மேடம்!
 

More articles

Latest article