அண்மையில் உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் இந்து அமைப்புகள் நடத்திய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சங்கப் பரிவார் தலைவர்கள் பேசிய வரம்பு மீறிய பேச்சுகள் நாட்டையே அதிர வைத்துள்ளன!
” இனி இங்கே இஸ்லாமியர்கள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்!
இதற்காக வாளை ஏந்தி அவர்களை…. ” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் அவர்கள் கொக்கரித்து இருக்கிறார்கள்!
இவற்றைக் கேட்ட நாட்டவரும், ஜனநாயக சக்திகளும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்!
இன்னும் சில மாதங்களில் வட மாநிலங்கள் சிலவற்றில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கும் சூழலில் இது போன்ற பேச்சு களுக்கு அர்த்தம் இருக்கிறது!
குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் பா. ஜ. வுக்கு எதிரான அலை வீசுவதாகக் கூறப் படுகிறது!
எனவேதான், இதுபோன்ற மதவெறி கருத்துகளை ஆர். எஸ். எஸ் தூண்டுதலுடன் சங் பரிவார் அமைப்புகள் இப்படி முழங்குவதாகக் கூறுகிறார்கள்!
மக்களைப் பிளவு படுத்தும் இத்தகைய தீய சக்திகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது ஜனநாயக சக்திகளின் கருத்து!
** ஓவியர் இரா. பாரி.