இயக்குநராக மட்டுமன்றி ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ உள்ளிட்ட படங்களையும் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் பா.இரஞ்சித்.

இதனிடையே, கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தை வெளியிடுகிறார் பா.இரஞ்சித்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.