
இந்திய மல்டிநேஷனல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான பிரமிட் சாய்மிரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பி.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.
குசேலன் , பில்லா , மொழி , எவனோ ஒருவன் , நான் கடவுள் போன்ற படங்களை விநியோகம் செய்திருக்கிறார்.
நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 2.30மணியளவில் உயிரிழந்தார்.
பி.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel