டில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தனது தந்தைக்கு டியர் அப்பா என்று ஆரம்பித்து உருக்கமாக ஆங்கிலத்தில் கடிதம் எழுதி உள்ளார்.
டியர் அப்பா…. என்று எழுதப்பட்டுள்ள ஆங்கில கடிததத்தின் சுருக்கம்…
உங்களுக்கு 74 வயது ஆகிறது, ஆனால் உங்களை 56 வயதால் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் எப்போதுமே பிறந்தநாளை மிகப்பெரிய கொண்டாட்டமாக நடத்தியதில்லை. ஆனால் நாட்டில் தற்போது நிலைமை அப்படியில்லை, சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பெரிய பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நாளில் நீங்கள் எங்களுடன் இல்லை. நீங்கள் எங்களுடன் இல்லாதது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எப்போது நீங்கள் வீடு திரும்பு கிறீர்களோ அன்றைய தினம் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடலாம்.
உங்களுக்கு எதிரான சதி நாடகத்தில் போராடி உண்மையின் துணையுடன் வெளி வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இத்துடன் அரசியல், அறிவியல், விளையாட்டு போன்று பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்தும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.