டில்லி

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தெலுங்கானா பாஜக வேட்பாளர்களைக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர்.  தற்போது அவர்களுக்கு எதிராக சோதனை, சம்மன் என விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.   இதைக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

ப சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில்,

“தெலுங்கானா தேர்தலுக்கு மத்தியில் அங்குப் போட்டியிடும் 4 காங்கிரஸ் வேட்பாளர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டும், சோதனை நடத்தப்பட்டும் உள்ளனர்.  

இதில் ஒருவர், கடந்த 1-ந் தேதி காங்கிரசில் இணைந்த பாஜக தேர்தல் அறிக்கை குழு தலைவர்.

‘எனக்குத் தெரிந்த வரை, பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் அதிகாரிகளால் தேடப்படவில்லை. 

அவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள் என்பது வெளிப்படையானது. 

உண்மையில் மாநிலத்தில் பாஜக  ஆட்சி அமைந்தால் அவர்கள் மக்களை நேராகச் சொர்க்கத்துக்கே கொண்டு சென்று விடுவார்கள்”

என்று கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.