சச்சின் பைலட்டுடன் ப.சிதம்பரம் சமாதான பேச்சு வார்த்தை..

சச்சின் பைலட் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சச்சின், ராஜஸ்தான் துணை முதல்-அமைச்சர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டாலும், கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் நீடிக்கிறார்.

அவரை இழக்கக் காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.

சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் சச்சினுடன் , காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஏற்கனவே பிரியங்கா காந்தி, சச்சின் பைலட்டுடன் பேசி இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி வேணுகோபால் ஆகியோரும் சச்சினுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

இந்த நிலையில் சச்சினைத் தொடர்பு கொண்ட ப.சிதம்பரம்,’’ இது நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற பிரச்சினைகளைப் பின்னர் பேசித்தீர்த்துக்கொள்ளலாம்’’ என , ’’ஆலோசனை ‘ கூறி ’சமாதானம் செய்துள்ளார்.

இந்த சமரசத்தை சச்சின் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

சச்சின் பைலட்டை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் அனுமதிக்கக்கூடாது என்பது ராஜஸ்தான் முதல் –அமைச்சர் அசோக் கெலாட் நிலைப்பாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியான கால கட்டத்தில் சச்சின் தேவையைக் காங்கிரஸ் உணர்ந்துள்ளதால், இந்த சமாதான படலங்கள் நடப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

-பா.பாரதி.