டில்லி

யர்நீதிமன்றங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆட்சேபித்ததை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மேல் முறையீடு செய்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து வருகிறது.  கடும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.  இது குறித்து மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் எவ்வித பயனும் ஏற்படவில்லை என மாநில அரசுகள் குறைகூறி வருகின்றன.

இது குறித்துப் பல மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ஆனால் உச்சநீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது.   கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதை உச்சநீதிமன்றம் ஆட்சேபித்துள்ளது.  இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு அளித்துள்ளது.  அதில் தற்போதுள்ள நிலையில் இந்த விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதே சரியாக இருக்கும் எனவும் அதற்கு அனுமதி அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..