தூத்துக்குடி

ன்று முதல் ஸ்டெரிலைட் நிறுவன ஆலையில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

நாடெங்கும் இரண்டாம் அலை பாதிப்பால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதனால் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மீண்டும் திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசு உண்டானதன்  காரணமாக மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.  இதையொட்டி நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து சுமார் 13 பேர் உயிர் இழந்தனர்.  அதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடப்பட்டது.   தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.  இந்த பணியில் 320 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆலையில் சோதனை ஓட்டம் முடிவடைந்து  நேற்று ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் நிலையை அடைந்தது.  இன்று முதல் டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் நிறப்பி மருத்துவமனைக்கு அனுப்பப்படும் பணிகள் தொடங்கி உள்ளன.