புதுடெல்லி:
டுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது நாடெங்கும் ஆட்கொல்லி நோயின் கொரோனா தீவிரம் அதிகமாக காணப்படுகிறது .இதனால் நாடே மிகவும் அச்சத்தில் உள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களில் இந்த கொரோனா நோய்க்கான தடுப்பு ஊசிகள் பற்றாக்குறையும் நிலவுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி யோடு மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது தேவைப்படும் ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகமாக நிலவுகிறது. மேலும் இதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழகத்தில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை இந்த ஆக்சிசன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையிலும் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிகழாமல் இருக்க தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முகஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தற்போது தமிழகத்திற்கு ஆக்சிசன் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சில அதிரடி உத்தரவுகளை மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவ ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு சுங்க வரி கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் போலவே ஆக்சிஜனை எடுத்து செல்லும் வாகனங்களும் அவசர மருத்துவ வாகனங்களாக கருதப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.