ண்டன்

க்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது.

சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  இந்த கொரோனா அறிகுறி உள்ளவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யக் குறைந்தது இரு தினங்கள் ஆகி வந்தன.  அதன் பிறகு சோதனை முறைகள் மாற்றப்பட்டு தற்போது 2 மணி நேரம் வரை ஆகின்றது.

இதையும் குறைக்க ஒரு புது முறையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜான்ஃபெங் மற்றும் வெல் ஹுவாங்க் ஆகியோர் தலைமையில் உள்ள குழு கண்டு பிடித்துள்ளது.   இந்த சோதனை மூலம் அரை மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும்  எனக் கூறப்படுகிறது.  இந்த தொழில்நுட்பம் மிகவும் நுட்பமானது என்பதால் ஆரம்ப நிலையில் பாதிப்பு உள்ளவர்களையும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சோதனை முறையில் ஒரே வெப்பநிலை அளிக்கும் ஹீட்ட்ர் மற்றும் ஆர் என் ஏ, மற்றும் டி என் ஏ சோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப் படுகின்றன.  இந்த சோதனையை கிராமப்புறங்களிலும் சமுதாய நலக்கூடங்களிலும் நடத்த முடியும்.  இந்த சோதனையின் முடிவை சாதாரணமாகவே பார்க்க முடியும்.

இந்த தொழில்நுட்பத்தில் வைரஸ் இருப்பதைப் பொறுத்து நிறம் ஆறும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.   மூன்று விதமான பொருட்கள்  இந்த சோதனையில் பயன்படுத்த படுகின்றன நோய் இருந்தால் இந்த ரசாயனம் ரோஸ் நிறத்தில் இருந்து மஞ்சளாக மாறும் மற்றும் நோய் இல்லை எனில் மஞ்சளாக உள்ளது ரோஸ் நிறமாக மாறும் எனக் கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை மேலும் எளிதாக மாற்றும் சோதனை உபகரணங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்கலைக்கழக குழு இறங்கி உள்ளது.  அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு சோதனைகளை மருத்துவமனைகள், விமான நிலையங்களில் மட்டும் இன்றி வீடுகளிலும் நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது