COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆரம்பகட்ட சோதனைகளில் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அடைந்த பிறகு, தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் பிற நாடுகளை அவுட்சோர்ஸ் செய்யும் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இது பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான சோதனை நிலைகளில் ஒன்றாகும்.
இந்தியாவில் சோதனை நடத்தும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா
தனியார் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் (எஸ்ஐஐ) இணைந்து அதிக அளவிலான தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்காக அஸ்ட்ராஜெனிகாவும் இந்தியாவில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது. ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதற்காக அதிகாரிகளிடமிருந்து ஒழுங்குமுறை உரிமத்தை கோரி விண்ணப்பித்துள்ளது. இப்போது, இதற்காக ஐந்து வெவ்வேறு நகரங்கள் ஒரே நேரத்தில் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து இப்போது அதன் மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. உலகளாவிய தடுப்பு மருந்து தயாரிப்பு போட்டியில் முன்னணியில் உள்ள ஆக்ஸ்போர்டு, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு இம்மருந்துகளை ஒரு பெரிய சதவீத அளவை வழங்குவதற்கான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கடந்த வாரம் (ஜூலை 20) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, AZD1222 என பெயரிடப்பட்ட தடுப்பு மருந்து பாதுகாப்பானது, ஏற்றுக் கொள்ளக்கூடியது மற்றும் நோயெதிர்ப்புத் திறனை தூண்டக் கூடியது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 18-55 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களிடமிருந்தும் இந்தத் தடுப்பு மருந்தினால் நோயெதிர்ப்பு செல் வழி செயல்பாடுகள் மற்றும் ஆன்டிபாடி வழி செயல்பாடுகள் என இரட்டை செயல்பாடுகளை உருவாக்க முடிந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தத் தடுப்பு மருந்து ஆய்வில் இருந்து நல்லது மற்றும் கெட்டது நிறைய அறிந்துக் கொள்வதில் இருந்து, ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மருந்தாக இருக்கும்.
ஆரம்பகால சோதனை முடிவுகளில், இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு மிகவும் “பாதுகாப்பானது” என்று கண்டறியப்பட்டது. இது பயன்பாட்டிற்கு ‘பாதுகாப்பானது’ என்று அறிவிக்க போதுமான சோதனை செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான தளங்களை அமைக்க இந்திய பயோடெக்னாலஜி துறை உதவி வருகிறது. “இது ஒரு முக்கியமான படியாகும், ஏனெனில் இந்த தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் நாட்டிற்குள் தேவையான தரவு வைத்திருப்பது அவசியம்” என்று பயோடெக்னாலஜி (டிபிடி) செயலாளர் செல்வி ரேணு ஸ்வரூப் சமீபத்தில் ஒரு நிறுவனத்துடன் பேசியதை மேற்கோளிட்டுள்ளார்.சோதனைக்கு தளங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான கட்டமாகும். தடுப்பு மருந்துகளின் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களை இந்தியா பயோடெக்னாலஜி துறை மேற்பார்வையிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேவையான நிதி உதவி, ஆராய்ச்சி வசதிகள், சோதனைகளை விரைவுபடுத்துதல் அல்லது தேவைப்பட்டால் ஒழுங்குமுறை உரிமங்களை அளித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறன. எனவே, டிபிடியின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு முன்பை விட விரைவில் இந்த தடுப்பு மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
வரவிருக்கும் மாதங்களில் பெரிய அளவிலான சோதனை நடைபெற உள்ளது. சாத்தியமான தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனைகளின் 2 மற்றும் 3 ஆம் கட்டங்களை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டிசிஜிஐ) அனுமதியை எஸ்ஐஐ கோரியுள்ளது. ஆதார் பூனவல்லா தலைமையிலான புனே நிறுவனம் தற்போது சோதனை தடுப்பு மருந்தின் ஒரே உற்பத்தியாளராக இருக்கும் நிலையில், அடுத்த சில வாரங்களில், மேலும் அதிக உற்பத்தி நிறுவனங்கள் சோதனையில் பங்கேற்பார்கள் என்று டிபிடி நம்புகிறது. தடுப்பு மருந்து தயாரிப்பாளர், வணிக ரீதியாக தொடங்குவதற்கு முன்னர் சோதனைகளை நடத்துவதற்கான அவர்களின் திட்டங்கள் என்பது உலகளவில் மிகப்பெரிய விவரங்கள் அடங்கிய தொகுப்புகளில் ஒன்றாகும். புனே மற்றும் மும்பை முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனை மையங்களில் 4000 முதல் 5000 பேருக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும். பின்னர், பெறப்படும் முடிவுகளைப் பொறுத்தே, சரியான நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் திறன் மற்றும் பக்க விளைவுகள், பாதுகாப்புக் குறித்து தீர்மானிக்கப்படும். ஆனால், அதுப் பற்று அறிந்துக் கொள்ள இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
மருந்தின் விலை என்னவாக இருக்கும்?
தயாராக உள்ள தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற விவாதத்துடன் அதன் விலையைப் பற்றிய கவலைகளும் எழாமல் இல்லை. அதேசமயம், எஸ்ஐஐ இந்திய மக்களுக்கு அதிக அளவிலான மருந்துகளை ஒதுக்குவது மட்டுமல்லாமல், ஒரு மலிவு திட்டத்தில் மருந்துக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் அரசு வழியிலேயே மக்களுக்கு கிடைக்கச் செய்யக் கூடும் என்று தெரிவிக்கும் அறிக்கைகள் உள்ளன. தற்போதைய தொற்றுநோய் நெருக்கடியில் இலாபம் பெற விரும்பாத பூனவல்லா குழுமம், இந்த தடுப்பு மருந்தை ரூ. 1000 – க்கும் குறைவான விலையிலேயே விற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Thank you: Times of India