ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கலக்கம் உருவாக்கியுள்ள கோவிட் –19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2021 இன் தொடக்கத்தில் இருந்து உற்பத்தியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகள் ஏற்கனவே அமெரிக்காவிலும் பிரேசிலிலும் தொடங்கப்பட்டுள்ளன. COVID-19 தடுப்பு மருந்தின் மருத்துவ மனித பரிசோதனையின் முதல் கட்டம் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து தயாரித்த COVID 19 தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை ஏற்கனவே அமெரிக்காவிலும் பிரேசிலிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து மனித பரிசோதனையின் முதல் கட்டத்தில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆய்வாளர்கள் தங்கள் சோதனை COVID-19 தடுப்பு மருந்து 18 முதல் 55 வயதிற்குட்பட்டவர்களில் இரு வழி செயல்படும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது என்று கண்டறிந்தனர். “கிட்டத்தட்ட அனைவரிடமும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி உண்டாகியிருப்பதை நாங்கள் காண்கிறோம்,” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அட்ரியன் ஹில் கூறினார்.
மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா அரசாங்கங்களுக்கும் மருந்து தயாரிப்பாளருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், அஸ்ட்ராஜெனிகா 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சோதனை முடிவுகள் வெற்றிகரமாக இருந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மெக்சிகோவில் பொது பயன்பாட்டிற்கான உற்பத்தியைத் தொடங்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் -19 தடுப்பூசிக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித சோதனைகளை நடத்த இந்தியாவின் மத்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு (எஸ்ஐஐ) ஒப்புதல் அளித்தது. “ஆய்வு வடிவமைப்பின் படி, ஒவ்வொரு பயனருக்கும் நான்கு வாரங்கள் இடைவெளியில் இரண்டு மருந்துகள் வழங்கப்படும் (முதல் நாள் முதல் டோஸ் மற்றும் 29 ஆம் நாள் இரண்டாவது டோஸ்) இதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் ஆகியவை முன்னரே முடிவு செய்யப்பட்ட இடைவெளியில் மதிப்பிடப்படும்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவும் வகையில் 100 மில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்தைத் தயாரிக்க தயாரிக்க பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 150 மில்லியன் டாலர் நிதியளிக்கும் என்று எஸ்ஐஐ தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், புனேவைத் தளமாகக் கொண்ட ஸீரம் நிறுவனம் இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு ஒரு டோஸுக்கு அதிகபட்சம் $ 3 வரை வசூலிக்க முடியும். “தற்போதுள்ள மற்றும் எதிர்கால நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு கோவிட் -19 தடுப்பு மருந்தின் மில்லியன் கணக்கான டோஸ்கள் உற்பத்தி செய்ய எங்களுக்கு பிரத்யேக வசதிகள் உள்ளன,” என்று SII இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறினார்.
தனித்துவ கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எனவும் அது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து எனவும் கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்யா அறிவித்தது. ஸ்பூட்னிக் V என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியது. இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனையின் பின்னர் ரஷ்யா இந்த தடுப்பூசியைப் பதிவு செய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது மகள்களில் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறினார். “இது திறமையானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று எனக்குத் தெரியும், மேலும் இது தேவையான அனைத்து சோதனைகளையும் கடந்துவிட்டது என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்” என்று புடின் அறிவித்தார்.
Thank you: Live Mint