டில்லி

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4.90 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் அளவுக்கு அதிகமாக உள்ளதால் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவாக்கி வருகிறது.  கடந்த ஜூன் மாதம் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் போடப்பட்டு வருகிறது.

இதற்காக மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து அதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்து வருகிறது.  அவற்றை மாநில அரசு மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் மக்களுக்கு முகாம்கள் அமைத்துச் செலுத்தி வருகின்றன.

இதுவரை மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் 72,70,48,325 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அளித்துள்ளது.  இதில் தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,90,36,525 டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இதைத் தவிர தற்போது 8.25 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.