“பிக்பாஸ்” புகழ் நடிகை ஓவியா ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே செல்லம். அவரது நடை, உடை, பாவனையை மட்டுமின்றி அவரது குணத்தையும் (!) பிக்பாஸில் பார்த்து கொண்டாடியவர்கள் தமிழ் மக்கள். கடைத் திறப்போ, படப்பிடிப்போ.. ஓவியா சென்றால் அத்தனை கூட்டம் கூடுகிறது.
தன்னிடம் நேரடியாக கேள்வி கேட்க ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறார் ஓவியா.
ஆம்.. . நீண்ட இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் உடையாட இருப்பதாக அறிவித்துள்ளார். #askoviyasweetz என்ற ஹேஷ்டேக்கில் ஓவியாவிடம் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம். அதற்கு ஓவியா, டிசம்பர் 20ம் தேதி இரவு எட்டு மணிக்கு பதிலளிப்பார்!
.