திருவனந்தபுரம்
தற்போது கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த சில செய்திகளை இங்கு காண்போம்.
கொரொனா பரவல் சீன நாட்டின் ஊகான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. அதைப் போல் இந்தியாவில் கேரள மாநிலத்தில் சீனாவில் இருந்து வந்த மாணவிக்கு முதலில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. உடனடியாக மேலும் பரவி இந்தியாவில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலமாகக் கேரளா மாறியது. எனவே கொரோனா பரவலை தடுக்கும் பணியைக் கேரள அரசு தீவிரமாக்கியது.,
உலகெங்கும் கொரோனா பரவலால் சொந்த நாடுகளுக்குப் பலரும் திரும்பி வந்தனர். இந்தியாவில் கேரள மாநிலத்தில் இது அதிகமாக இருந்தது. இதில் நிறைய பேர் கொரோனா தொற்றோடு வந்தனர். எனவே அரசு கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், பராமரிப்பு மையம் என பல பணிகளைச் செய்து இந்த கொரோனா பரவலை அடியோடு ஒழிக்க முயன்று அதில் அப்போது கேரள அரசு வெற்றியும் கண்டது.
தற்போது இந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது எந்த நடவடிக்கையாலும் கட்டுப்படுத்த முடியாமல் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி சராசரியாக 6000 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கபடுகிறது. இதற்குத் திருவோணப் பண்டிகை, உள்ளாட்சித் தேர்தல், போராட்டங்கள், விழாக்கள் திருமண நிகழ்வுகள் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
குறிப்பாகச் சபரிமலை பக்தர்கள் மூலம் அதிக அளவில் பரவுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அங்கு வ்ரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்புப் பணி மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10 வரை முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதோருக்கு கடும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளால் கொரோனாவின் கொடூர பரவல்; குறைய வேண்டும் எனக் கேரள மக்கள் மட்டுமின்றி அனைத்து மாநில மக்களும் விரும்புவதே உண்மையாகும்.,