சென்னை:
மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று  ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 லிருந்து 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இருந்தாலும்,  நேற்று  ஒரே நாளில் 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,575 ஆக அதிகரித் துள்ளது. சென்னையில் இதுவரை 82,764 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைக ளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 398 பேரும், மணலியில் 132 பேரும், மாதவரத்தில் 578 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 602 பேரும்,  ராயபுரத்தில் 806 பேரும், திருவிக நகரில் 1,137 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பத்தூர் மண்டலத்தில் 1198 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,453 பேரும், தேனாம்பேட்டை யில் 1,013 பேரும், கோடம்பாக்கத்தில் 1734 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வளசரவாக்கத்தில் 937 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 578 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,194 பேரும் பெருங்குடியில் 502 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 399 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்த 74 பேர் கொரோனா   பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.