டெல்லி: இந்தியாவில் 9.5 கோடி பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என்ற தகவலை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டிலேயே  அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள மாநிலமாக கேரளா உள்ளது.

இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்ற தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 95 கோடியே 8லட்சத்து35ஆயிரத்து 903 பேர்  பாஸ்போர்ட் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.

அந்த பட்டியலில், கேரளாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர், அதாவது 1,12,66,986 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் அதிக நபர்கள் பாஸ்போர்ட் பெற்ற மாநிலம் கேரளா தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கேரளாவை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில், 1கோடியே 4லட்சத்து 73ஆயிரத்து 988 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாநில வாரியாக பாஸ்போர்ட் பெற்றவர்களின் பட்டியல்: