இஸ்லாமாபாத்: ’40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்’ என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Gallup Pakistan நடத்திய சமீபத்திய (ஜுன் மாத) கணக்கெடுப்பின்படி, 94% பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் சமீப காலமாக நடைபெற்று ஆட்சி அதிகார மோதல் காரணமாக, ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது .பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், மக்கள் அவதிப்பப்பட்டுவருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்போது மக்களிடம் நாட்டின் பொருளாதாரம், ஆட்சி அதிகாரம், விரும்பும் நாடு உள்பட பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் தாங்கள் பாகிஸ்தானை விட்டுவெளியேறி இந்தியா உள்பட சில நாடுகளில் வசிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கையை பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இங்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.
40 சதவீதம் பாகிஸ்தானியர்கள் இடம்பெயர விரும்புகிறார்கள். குறிப்பாக, பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பேர் இடம்பெயர விரும்புகிறார்கள்.
ஏற்கனவே பலர், எகிப்து, லிபியா மற்றும் துபாய் வழியே மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
சமூக பாதுாப்பு இல்லாதது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவை மக்கள் இடம்பெயர விரும்புவதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடுமையான சிரமங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், சட்டவிரோத இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் Gallup Pakistan என்ற நிறுவனம் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 94% பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த க ணக்கெடுப்பு மக்களிடையே நிலவும் உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, பொருளாதார கஷ்டங்கள், அமைதி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பற்றிய குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகிறது.
தாங்கள் வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாககூறியவர்களில் 56% பேர் பொருளாதார நெருக்கடிகளை முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர். கூடுதலாக, பதிலளித்தவர்களில் 24% பேர் பாகிஸ்தானில் அமைதி இல்லை என்றும், மேலும் 14% பாகிஸ்தானியர்கள் நாட்டில் இருண்ட எதிர்காலத்தைக் காண்கிறோம் என்றும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.