கோலரெடோ:
அமெரிக்காவின் கோலரெடோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் வீசுவதால், நிலைமையை சமாளிக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கோலரெடோ மாகாணம் மலைகள் நிறைந்து காணப்படும் பகுதி. இங்கு கடும் பனிப் பொழிவும், புயல் காற்றும் வீசுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அவசரநிலை பிரகடனப்படுத்தி அம் மாகாண ஆளுநர் ஜான் ஹிக்கென் லூப்பர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கார் ஓட்டுநர்கள் முகப்பு விளக்குளை எரியவிட்டபடி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் காரணமாக 110 விபத்துகள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்திருப்பதாக மாகாண நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]