கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) பணியாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் 100 பேர் கடந்த 26ம் தேதி பாஜக.வில் இணைந்ததாக செய்திகள் வெளியாயின. இது அரசியலில் மட்டுமின்றி தரமிக்க முன்னணி கல்வி நிறுவனமான ஐஐஎம்.லும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 3 பணியாளர்கள் இது குறித்து கூறுகையில், ‘‘இந்த செய்தியில் 50 சதவீதம் மட்டுமே உண்மை. 40 பணியாளர்கள் பாஜக.வில் இணைந்தனர். இதுவும் அக்கட்சியினர் தவறான வழிகாட்டி அழைத்துச் சென்றனர்’’ என தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிர்வாக பிரச்னை தொடர்பான கோரிக்கைளுக்கு தீர்வு காண்பதற்காக பாஜக.வினர் அழைத்துச் சென்றனர். ஆனால் அது உறுப்பினர் சேர்க்கை இயக்கம் என்பது எங்களுக்கு தெரியாமல் போனது.

ஊதியம், சேம நில நிதி, ஒய்வூதியம் தொடர்பான நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறி ஐஐஎம் வளாகத்தில் உள்ள பாஜ ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர். பாஜ ஆளுங்கட்சி என்பதால் இது சாத்தியப்படும் என்று அவர்ளது அழைப்பை ஏற்றுச் சென்றோம்.

நாங்கள் தலைவர்களை சந்தித்ததில் கூட தவறில்லை. ஆனால் கட்சியின் இணைந்துள்ளோம் என்று மாற்றி அறிவித்துவிட்டனர்’’ என்றனர். மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் ஐஐஎம்.. பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் ªன்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால், ‘‘திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் மீதும், எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் மீதும் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஐஐஎம் ஊழியர்கள் கட்சியில் இணைந்தனர்’’ என்று பாஜக.வினர் தெரிவித்துள்ளனர்.
‘‘மேற்குவங்கத்தில் தூய்மை மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி கொண்ட கட்சியாக பாஜக இருப்பதால் அவர்கள் இணைந்துள்ளனர். படித்தவர்கள் கட்சியில் சேருவதை பாஜக வரவேற்று ஏற்றுக் கொண்டது’’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜ மாநில தலைவர் திலீப் கோஷ் கூறுகையில்,‘‘திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை இழந்ததால் ஆசிரியர்கள் பாஜக.வில் இணைந்துள்ளனர். மோடியின் வளர்ச்சி திட்டத்தில் அவர்கள் பங்கெடுப்பதற்காக இணைந்துள்ளனர்’’ என்றார்.

கட்சியில் எத்தனை பேர் இணைந்தார்கள் என்பதற்கு சரியான புள்ளி விபரங்களை திலீப் கோஷ் அளி க்கவில்லை.

‘‘100 பேர் இணைந்தார்களா என்பது ஒரு பொருட்டல்ல. 10 பேர் படித்தவர்கள் சேர்ந்தாலும் கட்சி மீதான நம்பிக்கையை தான் வெளிப்படுத்தும். இவர்கள் இதற்கு முன் எந்த கட்சியையும் ஆதரித்தவர்கள் கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கும் போராசிர்கள் அனைவரும் அந்த கட்சியின் உறுப்பினர்கள். அதனால் இவர்கள் மாணவர்களை அக்கட்சியில் இணைத்தனர். அப்போது அக்கட்சி ஆட்சியில் இருந்ததும் ஒரு காரணம். மோடியின் வளர்ச்சி பணியில் பங்கெடுப்பதற்காக ஐஐஎம் ஊழியர்கள் பாஜவில் இணைந்துள்ளனர்’’ என்றார்.

இது குறித்து ஐஐஎம் விரிவுரையாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘பணியில் இருக்கும் 2 பேராசிரியர்கள் மட்டுமே பாஜகவில் இணைந்துள்ளனர். மற்ற இருவர் ஓய்வுபெற்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் கல்வி சாராத ஊழியர்கள். இதைத்தான் 100 என்று பாஜ தலைவர் கூறியுள்ளார். மற்றபடி படித்தவர்கள் மத்தியில் பாஜவு க்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை ஏற்க முடியாது’’ என்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘ஐஐஎம்.ல் பணியாற்றி கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி ஓய்வுபெற்ற பேராசிரியர் அம்புஜ் மகந்தி தான் இந்த இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். இவர் முகம் அறிந்த பாஜக தலைவர். பென்சன் பிரச்னையில் உதவுவதாக ஊழியர்களுக்கு இவர் உத்தரவாதம் அளித்தார்’’ என்றார்.

மகந்தி தான் ஊழியர்களை அழைத்து வந்தார் என்பதை கோஷ் ஒப்புக் கொண்டார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் தமலுக்கு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மகந்தி கூறுகையில்,‘‘ நான் இயற்கையாக ஒரு அரசியல்வாதி. சிறந்த கட்சி என்பதால் நானும், ஐஐஎம்.மை சேர்ந்த சிலரும் பாஜக.வில் இணைந்தோம். படித்தவர்கள் மேற்குவங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்றவர்களை கட்சியில் இணைப்பதற்காக அழைத்துச் சென்றேன். மேற்குவங்கத்தில் ஊழல் இல்லாத ஆட்சி இது வரை இருந்ததில்லை’’ என்றார்.

ஊழியர் ஒருவர் கூறுகையில்,‘‘இந்த நிகழ்வு மூலம் அரசியல் லாபம் தேட பாஜக முயற்சி செய்கிறது. மேற்குவங்கத்தில் படித்தவர்கள் மத்தியில் பாஜக.வுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க இதை பாஜ பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் கட்சியில் இணைந்தவர்கள் தற்போது வருத்தப்படும் சூழல் தான் நிலவுகிறது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பேராசிரியர் பிரசாந்த் மிஸ்ரா என்பவரது பெயரும் வெளியாகியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் கூறுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி நடந்ததே எனக்கு தெரியாது. நான் அதில் கலந்துகொள்ளவில்லை’’ என்றார்.