டெல்லி:
ந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி, மக்களின் வாழ்வாதாரத்தையும், உலக பொருளாதாரத்தையும் சின்னப்பின்னமாக்கி உள்ளது.
இந்தியாவில் தொற்று பரவல் சில மாநிலங்களில் தீவிரமாகி உள்ளது. மொத்த மாநிலங்களில் சுமார் 78சதவிகித பாதிப்பு தமிழகம் உள்பட 7 மாநிங்களில் மட்டுமே உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியா.
கடந்த 24 மணி நேரத்தில்  24 ஆயிரத்து 850 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஆகும். இதில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில்  7,074 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது குறிப்பிடத் தக்கது.  அதேபோல், ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 6,87,760 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா சோதனை அதிக அளவில் நடத்தப்படுவதால்தான், பாதிப்பு எண்ணிககை அதிகமாக இருப்து தெரிய வரவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளதாக  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ஐ.சி.எம்.ஆர் அதிகாரி, “இந்தியாவில் கடந்த 14 நாட்களில், சராசரி சோதனைகள் 2.15 லட்சமாக உள்ளன (2,15,655) ஆனால், கடந்த ஐந்து நாட்களில் முறையே 10 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ன. தற்போதைய நிலையில் சோதனைகள் 1 கோடியை தாண்டிவிட்டது.
கொரோனா சோதனைகள் செய்யும்  திறனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக, பொது (788) மற்றும் தனியார் துறை (317) ஆகிய இரண்டிலும் சுமார் 1,105 கொரோனா சோதனை ஆய்வகங்க ளுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்கள் (592); ட்ரூநாட் லேப்ஸ் (421) மற்றும் சிபிஎன்ஏடி லேப்ஸ் (92)  ஆகியவையும் அடங்கும்.
இவ்வாறுஅவர் கூறினார்.