டெல்லி: 12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் கொரோனா தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா 4வது அலை  ஜூனில் வர வாய்ப்பு உள்ளதால், மார்ச் 16ந்தேதி முதல்  12 வயது முதலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் இரு டோஸ் தடுப்பூசியானது 59.08 சதவிகிதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.  82.5 கோடி மக்கள் இரு டோஸ் தடுப்பூசி எடுத்துககொண்டுள்ளனர். மார்ச் 16ந்தேதி முதல் 12 வயது முதல் 14வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 16-ம் தேதி முதல்  தற்போதுவரை 12-14 வயது சிறார்களில் 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இதையடுத்து ஒட்டுமொத்தமாகப் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 182.83 கோடியாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து சிறார்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.