டெல்லி: பீகார் வாக்காளர் திருத்தம் (Bihar SIR) உள்பட வாக்காளர் பட்டியல் முறைகேடு கண்டித்து, OUR VOTE. OUR RIGHT OUR FIGHT என வாசகம் அடங்கிய பேனருடன் பாராளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று. நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம், என வாசகங்கள் அடங்கிய பேனருடன் மத்தியஅரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக, பீகாரில் சிறப்பு தீர்த்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை, பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்டு 11ந்தேதி) , தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை அவைக்கு வந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் OUR VOTE. OUR RIGHT OUR FIGHT என வாசகம் அடங்கிய பேனரை காட்டி, மத்தியஅரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.