ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’.

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ் ,நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே மோகன்லாலுடன் நடித்துள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ஐயப்பன் நாயர், இசையமைப்பாளராக ரோனி நபேல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தின் வெளியீடு மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை கேரளாவில் தணியாத காரணத்தால் திரையரங்குகள் திறப்பு தள்ளிப் போய் மரக்கார் வெளியீட்டுத் திட்டம் தோல்வியடைந்தது.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். திரையரங்குகள் முன்பு பேசிய பணத்துக்கு படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதனால், வாங்கிய அட்வான்ஸ் தொகையை அனைத்து திரையரங்குகளுக்கும் ஆண்டனி பெரும்பாவூர் திருப்பித் தந்துள்ளார். படத்தை ஓடிடியில் வெளியிடவும் முயற்சி எடுக்கப்பட்டது.

பிரச்சனை பெரிதான நிலையில் கேரள அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முயன்றது. மரக்கார் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பிரச்சனை பெரிதான நிலையில் கேரள அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முயன்றது. மரக்கார் திரையரங்கில் மட்டுமே வெளியாகும்.