
புதியவன் இராசையாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. தயாரிப்பாளர் S.தணிகைவேல் முதல் முறையாக தனது R.S.S.S. பிக்சர்ஸ் சார்பாக ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்ய , அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார் மேலும் தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடிப்பில், ஈழத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 40 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகி சிறந்த நடிகர் சிறந்த ஒளிப்பதிவு சிறந்த இசை என பல விருதுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் அமேசான் பிரைம் வீடியோ நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களிலும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]ஓடிடி தளத்தில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரம் 'ஒற்றைப் பனைமரம்' pic.twitter.com/FgOu0XQzag
— PRO Kumaresan (@urkumaresanpro) July 21, 2021