பிளைண்ட் டேட், டை ஹார்ட், ஆர்மகெட்டான் உள்ளிட்ட படங்களில் நடித்து உலகம் முழுக்க உள்ள ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ப்ருஸ் வில்லிஸ்.

1987 ம் ஆண்டு மூன்லைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். 90 களில் வெளியான இவரது படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் என்று சொல்லுமளவிற்கு இருந்தது.

67 வயதாகும் ப்ருஸ் வில்லிஸ் தற்போது எதையும் புரிந்து கொள்ளவும் பேசவும் முடியாத அளவுக்கு மூளைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் இனி தொடர்ந்து படங்களில் நடிக்க மாட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடைசியாக அவர் நடித்த ‘ஏ டே டு டை’ திரைப்படம் இந்த மாதம் 4 ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

ப்ருஸ் வில்லிஸ் – எம்மா ஹெம்மிங் – டெமி மூர்

‘இண்டீசன்ட் ப்ரோபோசல்’, ‘ஸ்ட்ரிப்டீஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை டெமி மூரை 1987 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ப்ருஸ் வில்லிஸ் 2000 மாவது ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் 2009 ம் ஆண்டு நடிகை மற்றும் மாடல் அழகி எம்மா ஹெம்மிங்கை திருமணம் செய்து கொண்டார்.

ப்ருஸ் வில்லிஸ் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பதை டெமி மூர் மற்றும் எம்மா ஹெம்மிங் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.