ண்டன்

பிரபல ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித் மரணம் அடைந்துள்ளார்.

ஹாரி பாட்டர் திரைப்படம் மாயா ஜால உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகளை ரசிக்க வைத்து என்றென்றும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது. ஆங்கிலத்தில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 8 பாகங்களாக உலகளவில் வெளியானது.

உலகெங்கும்ம் உள்ள ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படமாக ஹாரி பாட்டர் இருந்தது. இதில் சில கதாபாத்திரங்களை மறக்கவே முடியாது அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல். பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித்.

இவர் வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie), கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹாரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.