திரைத்துறையில் பரவலாக அறியப் படுபவரான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை மரணமடைந்தார். பாண்டுவுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே கோமகன். பிரபல பார்வை மாற்றுத்திறனாளி பாடகரான இவர் இன்றைய தினம் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார்.
இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவலாக ஒரு தலை ராகம் திரைப்படத்தினை தயாரித்து இயக்கியவரான இ.எம்.இப்ரஹிம் உயிரிழந்துள்ளார்.
இந்த படத்தின் கதை வசனத்தை எழுதி, இசையமைத்த டி.ராஜேந்தரும், தயாரிப்பாளர் இப்ரஹீமும் இப்படத்தினை மாறி மாறி இயக்கியிருந்ததால், இப்படத்தில் டி.ராஜேந்தர் பெயர் இசை, பாடல்களில் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இப்ரஹீமின் பெயரே இயக்குநர் பெயராக இடம் பெற்றிருந்தது.