கத்சிங்பூர்

ரிசா மாநிலக் கோவில் ஒன்றில் புதிய வாகனங்களுக்கு பூஜை செய்ய ஹெல்மெட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்கள் ஒரிசா மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.    அதிலும் இருசக்கர வாகனங்களின் விபத்துக்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன.     இதை தடுக்க அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.    அரசு மட்டுமின்றி ஆன்மீகமும் அதற்கு உதவ தற்போது முன் வந்துள்ளது.

புதிய இருசக்கன வாகனங்கள் வாங்குவோர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்று    ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள மா சரளா கோவிலில் இதற்காக ஒரு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.   கோவில் வாசலில் ஹெல்மெட் இல்லை என்றால் புதிய வாகனங்களுக்கு பூஜைக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு புது வாகனங்கள் வாங்கும் போது கூடவே ஹெல்மெட் வாங்க வேண்டும் என்பது அவசியம் என்பதை ஆன்மீக ரீதியில் வலியுறுத்தியுள்ளது.