ஜார்ஜ் லூகஸ் இயக்கத்தில் ஸ்டார் வார்ஸ் ஒரிஜினல் ட்ரைலொஜி என்று தொடர் படங்களாக 1977 , 80 , 83 ல் வெளிவந்தது , அதில் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியது டேவிட் ப்ரௌஸ். அவர் இன்று 85 வயதில் லண்டனில் இயற்கையெய்தியுள்ளார் என்பதை போவ்விங்க்டன் மேலாண்மை நிறுவனம் இணையத்தில் வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டுள்ளது.
டேவிட் ப்ரௌஸ், படங்கள் நடிப்பதற்கு முன்பு, பளு தூங்குவதில் சாம்பியனாக இருந்துள்ளார். ட்ரைலொஜி என்று சொல்லக்கூடிய மூன்று படங்களிலும் டார்த் வேடர் கதை பாத்திரம் ரசிகர்களின் பாராட்டுகளையும் ஆரவாரத்தையும் அள்ளிக்குவித்ததென்றே சொல்லவேண்டும்.
இதில் என்ன வேடிக்கை என்றால், எந்த ஒரு படத்திலும் டேவிட் ப்ரௌஸ் அவர் சொந்த குரலை பயன்படுத்தவில்லை, அதுமட்டுமின்றி அவர் முகத்தையும் கூட மக்களுக்கு திரையில் காட்டவில்லை. அப்படி இருந்தும், அவருடைய ரசிகர்கள் அந்த டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்துடன் இணைந்து அவர் நடிப்பைக் கொண்டாடினர். டேவிட் ப்ரௌஸ் குரலுக்கு பதில் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் என்ற அமெரிக்க நடிகரின் குரலை பயன்படுத்திக்கொண்டார் ஜார்ஜ் லூகஸ்.
பலர் அறியாத ஒரு தகவல்… ஜார்ஜ் லூகஸ் எழுதிய ஸ்டார் வார்ஸ் நாவலை பலர் கையாண்டு படமாக எடுத்துள்ளனர். அந்தக் கதையைத் தழுவி பன்னிரண்டு படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் மொத்த வருமானம் இந்திய மதிப்பில் 12225 கோடி ரூபாய் ஆகும்.
டேவிட் ப்ரௌஸ் வெறும் நடிகர் மட்டுமல்ல…அவர் மக்களிடையே மிகுந்த அன்பு கொண்டவர். அவர் மக்கள் நலனுக்காக ஆற்றிய பணிக்காக 2000 ஆம் ஆண்டில் எலிசபெத் மகாராணியால் கௌரவிக்கப்பட்டார். டேவிட் ப்ரௌஸ் மறைவு அவர் குடுபத்தினருக்கும் அவருடைய பல லட்சம் ரசிகர்களுக்கும் பெரிய இழப்பென்றே சொல்ல வேண்டும்.