சென்னை: நாட்டிற்கே முன்னோடியாக ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரச அரசாணை வெளியிட்ட நிலையில், ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்தின் முதல் கூட்டம் டிஜிபி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. நல வாரியத்துக்கான விதிமுறைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஓய்வுபெற்ற துணை ஆணையர் ஆர்.சின்னராஜ், எஸ்.பி. (ஓய்வு) என்.தாமோதரன், ஏ.எஸ்.பி (ஓய்வு) முரளி, அரசு பிரதிநிதி வைதேகி, நிதி நிர்வாகி சுமதி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்தின் முதல் கூட்டம் தமிழ்நாடு டிஜிபி சைலைந்திர பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓய்வு பெற்ற காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டிலேயே ஒரு முன்னோடி திட்டமான, “ஓய்வு பெற்ற காவலர் நலவாரியம்” அமைத்திட அரசாணையை 03.03.2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற துணை ஆணையர் ஆர்.சின்னராஜ், ஓய்வு காவல் கண்காணிப்பாளர் என்.தாமோதரன், ஓய்வு பெற்ற பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளி, அரசு பிரிநிதி வைதேகி மற்றும் நிதி நிர்வாகி சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற காவலர் நலவாரியத்தின் முதல் கூட்டம் இன்று (21.03.2023) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் நடந்தது டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 60,000 ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்குழு தனது அறிக்கையினை தயாரித்து அளிப்பதற்கான காலவரையரை நிர்ணயிக்கப்பட்டது.” என காவல்துறை தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.