சென்னை:

மிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். 3 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர்கள்  நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசு, கொரோனா நோய் தொற்றுக்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் ஏற்கனவே 530 டாக்டர்கள், 4893 நர்ஸ்கள், 1508 லேப் டெக்னீசியன்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

மேலும், மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் வீதத்தில் 665 டாக்டகர்களையும், மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வீதத்தில் 365 லேப் டெக்னீசியன்களையும், மாத ஊதியம் ரூ.12 ஆயிரம் வீதத்தில் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் பணி நியமனம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.