அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு

Must read

டல் நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று அம் மருத்துவமனையின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
11
இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் பரவின. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று நள்ளிரவில், சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்து வந்தார்.  அதே போல நள்ளிரவில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூடி, தமிழகம் முழுதும் காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்,  அனைவரும் இன்று காலை 11 மணிக்கு அப்பல்லோ மருத்துவனை வர உத்தரிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More articles

Latest article