பில் கேட்ஸ் தனது  தந்தைக்கு இரங்கல்

Must read

பில் கேட்ஸ் தந்தை வில்லியம் கேட்ஸுக்கு இரங்கல் தெரிவிக்கும் நெட்டிசன் பதிவு

ன்றி : பார்த்திபன் சண்முகம்

இரங்கல், : வில்லியம் ஹென்றி கேட்ஸ் ( நவம்பர் 30, 1925 0 செப்டம்ப்ர் 14, 2020), பில் கேட்ஸ் சீனியர் என அழைக்கப்பட்டார்.  அவர் அமெரிக்காவின் புகழ் பெற்ற வழக்கறிஞர், பரோபகாரி மற்றும் சமூகத் தலைவர் ஆவர். அவர் ஷீல்டர் மெக்புரும் அண்ட் கேட்ஸ் என்னும் சட்ட நிறுவத்தை நிறுவி உள்ளார்.  அத்ன் பிறகு அது கே அண்ட எல் கேட்ஸ் என மாறியது.  அத்துடன் அவர் சியாட்டில் மற்றும் வாஷிங்டன் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் பதவி வகித்துள்ளார்  அவர் மகன் பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவன துணை அதிபர் என்பது அனைவரும் அறிந்ததே.

 =கடந்த 14 ஆம் தேதி அன்று வில்லியம் கேட்ஸ் இறந்த போது அவர் மகன் பில் கேட்ஸ் அளித்துள்ள இரங்கல் செய்தி இதோ:

எனது தந்தை நேற்றிரவு அமைதியாக அனைத்து குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருக்கும் போது உயிர் இழந்தார்.

நாங்கள் எந்த  அளவுக்கு அவரை இழந்துள்ளோம் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது.  நாங்கள் துயரத்துடன் நன்றியையும் உணர்கிறோம்.  அவருக்கு 94 வயதானதாலும் அவர் உடல்நிலை சீர் கெட்டு வந்ததாலும் அவரது மறைவை நாங்கள் ஓரளவு எதிர்பார்த்ததாலும், அவர் மரணத்தால் நாங்கள் அதிகம் அதிர்ச்சி அடையவில்லை.   இத்தனை வருடங்கள் எங்களுடன் அவர் வசித்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்.  நாங்கள் மட்டும் அவர் மறைவால் துயருறவில்லை. எனது தந்தையின் புத்திக் கூர்மை,  தாராளத்தன்மை, இரக்கம், மற்றும் மனிதாபிமான தன்மை உல்கில் உள்ள அனைத்து மக்களையும் துயரில் ஆழ்த்தி உள்ளது..

நான், எனது சகோதரிகள் கிறிஸ்டி, மற்றும் லிபி ஆகியோர் எனது தாய் மற்றும் தந்தையால் நன்கு வளர்க்கப்பட்டோம்.  அவர்கள் எங்களுக்கு நல்ல ஊக்கம் அளித்து எங்களிடம் மிகவும் பொறுமையுடன் இருந்தனர்.  எனது பதின்ம வயதில் அவர்களுடன் சண்டை வந்த போதிலும் அவர்களது அன்பு மற்றும் ஆதரவுக்கு எவ்வித தடையும் இன்றி இருந்ததை நான் உணர்வேன்.  எனது இளம் வயதில் பல துணிச்சலான செயல்கள் செய்ய இதுவும் ஒரு காரணம் ஆகும்.  நான் இளைஞனாக இருந்தபோது கல்லூரியில் இருந்து விலகி பால் ஆல்லென் உடன் இணைந்து  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடங்கிய போது அது தோல்வி அடைந்திருந்தாலும் அவர்கள் எனக்குத் துணை இருந்திருப்பார்கள்.

எனக்கு வயதாக ஆக எனது தந்தையின் பாதிப்பு எனது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் இருந்தது.  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடங்கிய போது பல முக்கியமான நேரங்களில் அவருடைய சட்ட ஆலோசனைகளைக் கேட்டு வந்தேன்.  அதே வேளையில் ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் நிறுவனத்துக்கும் அவர் இதே போலச் சட்ட ஆலோசனை அளித்து வந்தார்.  அதனால் அவரைப்பற்றி பலரும் பலவிதமான கதைகள் கட்டி விட்டதால் எனக்கும் சந்தேகம் இருந்தது.

எனது முன்னேற்றத்தில் எனது தந்தையின் தாக்கம் அதிகமிருந்தது.  நான் குழந்தையாக இருந்த போதே அவர் தனது முடிவுகளைத் திணிக்க மாடடார் .   எனக்கு நன்கு வரும் பணியை விட புதிய பணிகளை எடுத்து திறம்பட நடத்த என்னை ஊக்குவிப்பார்.  குறிப்பாக எனக்குத் தெரியாத நீச்சல், மற்றும் சாசர் விளையாட்டுகளை நான் கற்றுக் கொண்டது அவரால் தான்.  அவர் சியாட்டில் நகரில் மிகவும் அதிகம் உழைக்கும் மற்றும் மதிற்பிற்குரிய வழக்கறிஞராக இருந்தார்.   அதே வேளையில் சமூகத் தலைவராகவும் இருந்துள்ளார்.

சமூக சேவை மற்றும் பரோபகாரத்தில் எனது தந்தையின் ஈடுபாடு மிகவும் அதிகமானதாகும்.  எனது குழந்தைப் பருவம் முழுவதும் அவரும் எனது தாயும் இரக்கம் கட்டுவது எப்படி என்பதில் எனக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து வந்தனர்  1990களில் ஒரு நாள் எங்கள் சமூக சேவைகள் தொடங்கும் முன்பு திரைப்படம் காண நான் மெலிந்தா மற்றும் தந்தை ஆகியோர் சென்றிருந்தோம்.   அப்போது என்னிடம் நன்கொடைகள் கேட்டு நிறையப் பேர் கோரிக்கை விடுப்பதைச் சொன்ன போது எனது தந்தை, நாம் உதவலாமே எனக் கூறினார்.

எனது தந்தையின் உதவி இல்லாமல் பில் அண்ட மெலிந்தா பில் தொண்டு நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது    இந்த தொண்டு நிறுவனத்தை வடிவமைத்து ஒரு மதிப்பை அளித்தவர் அவர்தான். அவர் மேலும் மேலும் கற்பதில் ஆர்வமாக இருந்தார். அவர் தனது வாழ்நாளில் எதையும் மற்றும் எவரையும் வெறுத்தது கிடையாது.   அவர் எப்போதும்  பிறகு பார்க்கலாம் எனத் தள்ளி வைத்தது இல்லை.   உலகில் யார் துயரடைந்தாலும் அவரால் கண்ணீரை அடக்க முடியாது.   எங்களுக்கு உதவிய எல்லோரையும் அவர் எப்போதும் நினைவில் வைத்திருந்தார்.

கேட்ஸ் ஃபவுண்டேஷனில் உதவி கேட்டு வருவோர் அனைவரும் எனது தந்தையுடன் பணி புரிவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அவர ஒவ்வொருவரிடமும் உள்ள தனித் தன்மையைக் கண்டறிந்து அவர்களைத் திறம்படச் செய்வார்.

நாங்கள் எங்கள் தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் போது தந்தை மகன் என்பதை விட நண்பர்களாகவே பழகினோம்.  இருவரும் சேர்ந்து பல முறை நல்ல முடிவுகள் எடுத்துள்ளோம்.  நாங்கள் இந்த தொண்டு நிறுவனத்தைத் தொடங்கிய போது அது எங்களுக்கு இத்டனை மகிழ்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கவில்லை.  நாங்கள் இருபது வருடங்களுக்கு மேல் ஒன்றாகப் பணி புரிந்ததில் மேலும் நெருக்கமாக ஆனோம்.

எனது தந்தை எனது 50 ஆம் பிறந்த நாள் அன்று எழுதிய கடிதத்தை நான் பொக்கிஷமாகப் பேணி வருகிறேன்.   அந்த கடிதத்தில் அவர் எங்கள் நெருக்கத்தைப் பற்றி எழுதி இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.   ஒரு தந்தை குழந்தைகளிடம்  காட்டும் அன்பை விடப் பன்மடங்கு அன்புடன் அவர் என்னுடனும் எனது சகோதரிகளுடனும் இருந்தார். இருந்தார்.

நான் அவரைப் பற்றி அதிகம் புகழ்வது அவருக்குப் பிடிக்காது  என்பதை நான் அறிவேன் ஆனால் அவரை புகழ்வது தவறில்லை.   அவரை பலரும் நீங்கள் தான் உண்மையான பில்கேட்ஸா எனக் கேட்டதுண்டு. எனவே நான் அவர் மகனாக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  உண்மையில்  நான அவர் இழப்பைத் தினமும் உணர்வேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article