திருவனந்தபுரம்
கடும் மழை காரணமாக கேர்லாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது. மழை ஆரம்ப தினம் முதலே மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது.எனவே அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதிலும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மழை கொட்டி வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
,இன்று மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்றி திருச்சூர் மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் குன்னம்குளத்தைச் சேர்ந்த 50 வயதான கணேசன், மற்றும் வலப்பாட்டைச் சேர்ந்த 42 வயதான நிமிஷா ஆகிய இருவரும் ஆவார்கள்.