சென்னை
தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் நாளை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,, விழுப்புரம், மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி, நாகை, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில், கனமழை அல்லது அதி கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தை ஒட்டி உள்ள புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கன மற்றும் அதி கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.