சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால், சென்னை, திருவள்ளூருக்கு  விடுக்கப்பட்ட  ரெட்  அலர்ட் எச்சரிக்கை நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது ஆரங்சு  அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்,  இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி விட்டு, தமிழ்நாடு நோக்கி வந்தது. இதற்கிடையில், அதன் வேகம் குறைவாக வானிலை ஆய்வுகள் தெரிவித்த நிலையில், நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக – புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவி வருவதாகவும், இதனால், பலத்த மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை வாபஸ் பெற்நது. இந்த நிலையில், இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுடு உள்ளது.

தற்போது சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் டிட்வா காரணமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

நேற்று முதன் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் வேகம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில்  கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக  தொடர்ந்து,  மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.