தினகரன் அணியைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, உற்சாகமாக ஒரு விசயத்தைச் சொல்லி சிரிக்கிறார்கள்.

“ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதிவி ஏற்கெனவே பறிபோய்விட்டது” என்பதுதான் அது.

நாம் அதிர்ந்துபோய் கேட்டால், “கட்சி கொறடாவின் உத்தரவை மீறி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக இவர்கள் வாக்களித்தார்கள்.

இவர்கள் மீது  கட்சித் தாவல் தடைச் சடடத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக எங்கள் தரப்பு  புகழேந்தி சொல்லி வருவது விளையாட்டல்ல.

ஏனென்றால், எங்கள் தரப்பு இப்படி கூறுவதன் அடிப்படை SC 270 (2007) என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்புதான்..

ராஜேந்திர சிங் ரானா அண்ட் ஓ.ஆர்.எஸ் எதிர் ஸ்வாமி பிரசாத் என்ற வழக்கு இது.

இது குறித்த தீர்ப்பில், “கொறடா உத்தரவுக்கு எதிராக ஒருவர் செயல்பட்ட உடனேயே அவரது பதவி பறி போய் விடும். அதை மன்னிக்கவோ உறுதிப்படுத்தவோ 15 நாள் கெடு சபாநாயகருக்கு உண்டு” என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகராத்தில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆகவே அவர்கள் எம்.எல்.ஏ பதவிகளை ஏற்கனவே இழந்து விட்டனர்.

நாங்கள் வழக்கு தொடுக்கும்போது இந்த வாத்ததைத்தான் வைப்போம். ஆகவே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேருக்கு எம்.எல்.ஏ. பதவியும் கிடையாது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கவும் முடியாது” என்கிறார்கள் தினகரன் அணியினர்.