சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர்களின் நக்கல் பேச்சு காரணமாக  ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இதுகுறித்து இன்று எடப்பாடி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக இரு பிரிவாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

தற்போது, ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், இரட்டை இலையை மீட்க அதிமுக அணியினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இரு அணிகளும் இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர்.  ஆனால், தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும், ஆனால் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறினார்.

இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது தெளிவாக உறுதியானது.

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணியினிர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தை கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்த ராஜினாமா கடிதம் வாங்க வேண்டும் என்றும் வலியிறுத்தி நிபந்தனை விதித்தனர்.

இதை சசிகலா அணியை சேர்ந்தவர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள். இதன் காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசை  சசிகலா குடும்பத்தினர் பின்னணியில் இருந்து இயக்கி வருவதும் தெரிய வருகிறது.

இந்நிலையில், தற்போது  முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி  தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் முதல்வர் எடப்பாட்டிக்கே உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.