மாலை 5 மணிக்கு துணைமுதல்வராக பதவி ஏற்கிறார் ஓபிஎஸ்!

சென்னை,

ன்று அமாவாசை நல்லநாளையொட்டி அதிமுக அணிகள் இணைப்பு இன்று நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து இன்றே புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு இன்றே நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா பாணியை கடைபிடித்து அமாவாசை நாளான இன்றே இணைப்பும், பதவி ஏற்பும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த இணைப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணைமுதல்வர் பதவியும், மா.பா. மற்றும் செம்மலைக்கு அமைச்சர்கள் பொறுப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மால 4.30 மணிக்கு மேல் நல்ல நேரம் இருப்பதால், அந்த நேரத்தில் பதவி ஏற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கு ஏற்ப தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக தமிழகம் திரும்புகிறார்.

இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினிர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைய 12 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இன்று அமாவாசை… நல்ல நாள்… ஆகவே இரு அணிகளும் இன்றே இணைகிறது. முற்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் இருப்பதால், அது முடிந்த பிறகே இணைப்பு அறிவிக்கப்படும் என்றும், அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மேல் உள்ள நல்ல நேரத்தின்போது சுமாராக 5 மணி அளவில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இரு அணி தலைவர்களும், கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு விட்டன என்று கூறியிருந்த நிலையில்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் முக்கிய முடிவு உள்ளிட்ட எந்த அறிவிப்பையும் அமாவாசை தினத்தில் அறிவிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் அதிமுக அணிகள் நாளை இணைப்பு அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டமு இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

தேர்தல் கமிஷன் கட்சி பெயர், சின்னம் முடக்கி வைத்ததை விலக்கிக் கொள்ள நடை முறைகளை மேற்கொள்ள காலஅவகாசம் பிடிக்கும்.

எனவே அதுவரை கட்சியை நடத்த வழிகாட்டும் குழு அமைத்து செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் தலைமை அலுவலகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
English Summary
Ops sworn over as Deputy Chief Minister, at 5pm!