ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு! ஐகோர்ட்டு ஒத்திவைப்பு

சென்னை,

திமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக பிரிந்திருந்தபோது, எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓபிஎஸ் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொல்லப்பட்டது  அப்போது ஓபிஎஸ் தரப்பில் அவகாசம் கேட்டதால், வழக்கை அக்டோபர் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர் செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனையடுத்து, 12 பேரையும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை  அக்டோபர் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
English Summary
OPS support MLAs disqualification case! HighCourt adjournment