மதுரை,

ன்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பஸ் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் கட்சியினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே,  பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்தி நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் கிடையாது என்றும் கூறினார்.

[youtube-feed feed=1]