சென்னை: அடுத்தடுத்த வழக்குகளால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக  அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  மற்றும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம்  இன்று சந்தித்து பேசினார். இந்த பேச்சு சுமார் 35 நிமிடம் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வழக்கில் மட்டுமே ஜாமின் கிடைத்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத வகையில், காவல்துறை அடுத்தடுத்து வழக்குகளை போட்டு அவரை சிறையில் வைக்க முயற்சித்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் எதேச்சந்திர போக்கை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற்று வருகிறத. ஜெயக்குமார் கைதை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசிய பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

அப்போது, சிறையில் ஜெயக்குமார் நலமாக இருப்பதாக கூறியவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயன்ற போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு  அச்சுறுத்தல் நடத்தி வருகிறது, அரசியல் ரீதியாக சந்திக்க திமுக அரசுக்க திராணி இல்லை. கள்ள ஓட்டு போட வந்த திமுகவினரை கையும் களவுமாக பிடித்ததால் உண்மைக்கு மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என குற்றம் சாட்டியவர்,  ஆளும் அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது அதிமுகவின் 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளது என்றவர், திமுக அரசு எந்தவித  அச்சுறுத்தல் கொடுத்தாலும்,  அதனை எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.