சென்னை,
தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மத்திய பாரதியஜனதா அரசின் மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் கழக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில்,
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களது தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
பாரதத் திருநாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் நரேந்திரமோடி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மாடுகளை இறைச்சிக்காக விற்பதை தடை செய்து நேற்று மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை நேற்று வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவு பற்றி எதுவும் குறிப்பிடாமல், மோடிக்கு ஓ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்திருப்பது அவர் மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட வழி செய்திருக்கிறது
சமூகவலைதளங்களில் ஓபி.எஸ்ஸை கடுமையாக விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.