சென்னை:
ட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 30 முதல் 40 சதவீதம் வரை பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கட்டுமான பொறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம்- சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,000 ஆகவும் ஒரு அங்குல ஜல்லி 3,900 ரூபாயாகவும் முக்கால் அங்குல ஜல்லி 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கம்பி, செங்கல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.