திண்டுக்கல் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க அணி, வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற அக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நேற்று ஓ.பி.எஸ். திண்டுகல்லில் பொதுக்கூட்டத்தில் பேசினார் அப்போது அவர், “ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரணை கமிசன் வைக்க தயங்குவது ஏன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், “அமைச்சர்களை

தீர்மானம்

கட்டுப்படுத்தி வைக்க எடப்பாடி பழனிச்சாமியால் முடியவில்லை. அமைச்சர்கள் தங்களது விருப்பத்துக்கு செயல்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், “வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களது அணி நூறு சதவிகித வெற்றி பெறும்” என்று கூறினார்.  இது தீர்மானமாகவும் இயற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, “நூறு சதவெற்றி என்று அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது, கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவது என்ற திட்டத்தில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது” என்று அரசியல்வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே நகர் இடைத் தேர்தலிலும், ஓ.பி.எஸ். அணி, கூட்டணி இன்று தனித்தே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.