மதுரை
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஒ ராஜா செயல்பட மதுரைக் கிளை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் ஓ ராஜா என்பவர் தமிழக துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஆவார்.
இந்த தலைவர் பதவி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு மனுவில் ஓ ராஜா உள்ளிட்ட 16 பேர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
அத்துடன் இதனால் ராஜா தலைவராகப் பதவி வகிப்பது செல்லாது என அந்த வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டது இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா தலைவராக செயல்பட இடைக்காலத் தடை விதித்துள்ளது.